Connect with us

சொந்த மண்ணில் எப்டியோ ஜெயிச்சுட்டு தென் ஆப்பிரிக்கா!..

India match

சொந்த மண்ணில் எப்டியோ ஜெயிச்சுட்டு தென் ஆப்பிரிக்கா!..

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் இந்தூரில் அக்டோபர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 227/3 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு கேப்டன் பவுமா 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 2வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய குயின்டன் டீ காக் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68 (43) ரன்களில் அவுட்டானார்.

ட்ரிஷன் ஸ்டப்ஸ் 23 (18) ரன்களில் அவுட்டானாலும் அவருடன் மீண்டும் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து களமிறங்கியது முதலே பந்தாடிய ரிலீ ரோசவ் 7 பவுண்டரி 8 சிக்சருடன் அதிரடியாக 100* (48) ரன்கள் சதமடிக்க இறுதியில் டேவிட் மில்லர் 3 சிக்சருடன் 19* (5) ரன்கள் குவித்து பினிசிங் கொடுத்தார்.

அதை தொடர்ந்து 228 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னில் ஏமாற்றினார். அதனால் இந்தியன் FANS வருத்தம் ஆனர்.

தென்ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக பிரிடோரியஸ் 3 எடுத்தார். அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்து. மறுபுறம் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சொதப்பினாலும் சொந்த மண்ணில் முதல் முறையாக 2 – 1 (3) என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவுக்கு ஒரு வெற்றி கிடைத்து விட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in India match

Advertisement
 

Trending

 
Advertisement
To Top