Connect with us

டி20 உலகக் கோப்பை..! கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

Featured

டி20 உலகக் கோப்பை..! கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று உலகில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்திய நேரப்படி சரியாக இரவு 7.30 மணிக்கு துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்காக, இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது :

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை இந்தியா பலமுறை வென்றிருந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாகிஸ்தானை எளிதாக கருத இயலாது என்றார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட சில வீரர்களின் உடல்தகுதியில் பின்னடைவு உள்ள நிலையில், பந்து வீச்சுக்கு ஹர்திக் பாண்ட்யா தயாராகி வருவதாக கோலி தெரிவித்தார்.

டி20 போட்டி என்றாலே விறுவிறுப்பும் பரபரப்பும் தான் இதில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் கடைசி ஓவர் வரை பரபரப்பை ஏற்படுத்தும் இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான இன்றைய போட்டி உச்சகட்ட பரபரப்பாக இருக்கும் என்பதில் மறுப்பு கிடையாது .

இந்நிலையில் இன்று நடக்கும் இந்த பரபரப்பான போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top