Connect with us

IND VS NZ : பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி..? இன்று 2வது டி20 போட்டி

Featured

IND VS NZ : பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி..? இன்று 2வது டி20 போட்டி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலாவதாக ஒருநாள் தொடரில் தீவிரமாக விளையாடியது. ஆனால் அணி அந்த அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பரிதாபமாக இழந்தது.

இதனை அடுத்து நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது மும்மரமாக விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் ராஞ்சியில் நடைபெற்ற நிலையில், அந்த போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று , இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் இந்த ஆட்டம் வாழ்வா-சாவா? ஆட்டமாகும் .

இன்றைய போட்டியில் இந்திய அணி தோற்றால் தொடரை இழப்பதுடன், டி20 தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பறிகொடுக்க வேண்டியது வரும். எனவே இந்திய அணியினர் முந்தைய தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்து தொடரில் நீடிக்க தீவிரம் கட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால் இன்றைய போட்டி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது .

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top