Connect with us

IND VS NZ : இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சால் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டான நியூசிலாந்து அணி..!

Featured

IND VS NZ : இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சால் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டான நியூசிலாந்து அணி..!

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தீவிரமாக விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது . ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் காரணமாக முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட பின் ஆலெனை ஷமி முதல் ஓவரிலேயே வீழ்த்தினார். இதையடுத்து களம் புகுந்த நிகோல்ஸ், டேரில் மிட்செல், கேப்டன் லதாம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரக் கான்வே அகியோரும் இந்திய வேகப்பந்து வீச்சில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வந்த வழி சென்றனர் . இதனால் அந்த அணி 15 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய பிரேஸ்வெல் 22 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அந்த அணி 21 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் திரும்பி சென்றதால் அந்த அணி 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top