Connect with us

வங்கதேச அணியுடன் வெற்றி பெறுமா இந்திய அணி??என்ன நடக்க போகிறது!

Sports

வங்கதேச அணியுடன் வெற்றி பெறுமா இந்திய அணி??என்ன நடக்க போகிறது!

ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 265 ரன்களை எடுத்தது.அதனை தொடர்ந்து இப்போது இந்திய அணி விளையாடி வருகிறது…170/5 என்ற இடத்தில இப்போது இந்திய அணி உள்ளது…

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்று போட்டிகள் கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் பார்த்து வருகின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது…அதன்படி வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் – லிட்டன்தாஸ் இணையை 2-வது ஓவரிலேயே முஹம்மது சமி பிரித்தார் ரன்கள் எதுவும் எடுக்காமல் சென்றார்.

3ஆவது ஓவரில் தன்சித் ஹசனை 13 ரன்களில் ஷர்துல் தாக்கூர் வெளியேற்றினார் அதனை தொடர்ந்து அனாமுல் ஹக்கின் விக்கெட்டையும் பறிகொடுத்து 6 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 29 ரன்களில் தடுமாறியது வங்கதேச அணி இப்படி ஆரம்பத்தில் தடுமாறி எப்படியோ 265 ரன்களை குவித்தது.

இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும்,முஹம்மது சமி 2 விக்கெட்டுகளையும்,அக்சர் படேல், ஜடேஜா, பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்…அதனால் இந்திய அணி ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக இருந்தது…

அதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் சுமார் என்று தான் சொல்லவேண்டும்…ஆரம்பத்திலே ரோஹித் சர்மா,திலக் வர்மா விக்கெட் போனது…சுப்மன் கில் பொறுப்பாக இப்போது விளையாடி வருகிறார்…இந்திய அணி 5 விக்கெட்கள் போக ஆடி வருகிறது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "வாரணாசியில் கட்டப்படவுள்ள புதிய சர்வதேச Cricket ஸ்டேடியத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!"

More in Sports

To Top