Connect with us

இந்திய அணியை ஒரு கை பார்க்க இறங்கிய ஆஸ்திரேலியா அணி…வெறித்தனமான ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்..!

Sports

இந்திய அணியை ஒரு கை பார்க்க இறங்கிய ஆஸ்திரேலியா அணி…வெறித்தனமான ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்..!

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா தங்களுடைய கடைசி ஆட்டத்தை இன்று விளையாடி வருகின்றனர்…மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி விளையாடி வருகிறது…

இந்த போட்டிகளில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது…இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியான இன்று யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்று சொல்லும் ஆட்டமாக தான் இருக்கும் என தெரிகிறது.

இருப்பினும் உலகக்கோப்பை தொடருக்கு முன் ஒரு அணியாக இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் என்ற காரணத்தினால் ரோகித் சர்மா,விராட் கோலி,குல்தீப் ஆகியோரை பிசிசிஐ மூன்றாவது ஒருநாள் போட்டியில் சேர்த்தது உள்ளது…

இதன் மூலம் உலககோப்பை தொடரில் விளையாடப் போகும் வீரர்கள் ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக கடைசியாக ஒரு முறை இணைந்து விளையாடினால் அணியில் ஒரு சிறந்த ஒற்றுமை இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது..

அப்படி பார்க்க பட்டாலும் இன்று ஆஸ்திரேலியா அணி வெறித்தனமான ஆட்டத்தை கொடுத்து வருகிறது,குறிப்பாக 23 ஓவரில் 178 ரன்கள் வரை அடித்து மாஸ் காண்பித்து வருகிறது..பழி வாங்கும் எண்ணத்தில் ஆஸ்திரேலியா அணி இன்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Chess: கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று தமிழகத்தின் வைஷாலி சாதனை!"

More in Sports

To Top