Connect with us

“IND v AUS: ODI தொடரை இலவசமாக வழங்கும் Jio Cinemas!”

Sports

“IND v AUS: ODI தொடரை இலவசமாக வழங்கும் Jio Cinemas!”

ஒரு நாள் சர்வதேச தொடர்கள் தொடங்க உள்ள நிலையில் இந்த முறை உள்நாட்டுப் போட்டிகளை, பிரத்யேகமாக ஒளிபரப்பும் உரிமையை BCCI ன்டர்நேஷனலிடமிருந்து வயாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது. முதல் ஒளிபரப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா இடையே செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது. அதோடு ஜியோசினிமாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய 11 மொழிகளில் இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

ஜியோசினிமா, டி.வி.யிலும், செல்போன் செயலி மூலமாகவும் போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதுகுறித்து வயாகாம்18- ஸ்போர்ட் தலைமைச் செயல் அதிகாரி (CEO) அனில் ஜெயராஜ் கூறும்போது, “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் பார்வையாளர்களுக்கு இந்திய கிரிக்கெட்டின் புதிய தாயகத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கும். மேலும் பொறுப்புணர்வுடன், விளையாட்டை ரசிக்கும் விதத்தில் முன்னோடியான மாற்றத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருவோம்.

இதுவரை பார்த்திராத வழிகளில் ரசிகர்கள் மிகவும் விரும்புவதை வழங்குவதே எங்கள் தொடர்ச்சியான முயற்சியாகும். மேலும் டிஜிட்டல் முறையில் தொடர்ந்து லீனியர்/ ஆஃப்லைன் டிவி நிகழ்ச்சிகளை வழங்குவோம். பிசிசிஐ நடத்தும் தொடர்களை இணையற்ற முறையில் வழங்குவோம்” என்று தெரிவித்தார். ரசிகர்களின் நேரடி பார்வை அனுபவத்தை மேம்படுத்த, இந்தத் தொடர் ஜியோசினிமாவில் 4K வில் ஸ்டிரீம் செய்யப்படும்.

ஜியோ சினிமா செயலியை (ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்ட்) செல்போன்களில் பதிவிறக்குவதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளைத் தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியும். மேலும், சமீபத்திய புதுப்பிப்பு செய்திகள், செய்திகள், விளையாட்டு ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு, ரசிகர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் சமூக வலைதளங்களில் Sports18 -ஐ பின்தொடரலாம். மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் வலைதளங்களில் Jio Cinema செயலியை பின்தொடரலாம்.

Match Schedule:

செப்டம்பர் 22, முதலாவது ஒருநாள் போட்டி, பகல் 12.30, பிசிஏ ஸ்டேடியம், மொஹாலி.
செப்டம்பர் 24, 2-வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, ஹோல்கார் ஸ்டேடியம், இந்தூர்.
செப்டம்பர் 27, 3-வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, எஸ்சிஏ ஸ்டேடியம், ராஜ்கோட்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ICC Rankings: அனைத்து Cricket வடிவிலும் இந்திய அணி முதலிடம்!"

More in Sports

To Top