Connect with us

“IND v AUS: ஒருநாள் தொடர் – இந்திய அணி Players List அறிவிக்கப்பட்டுள்ளது!”

Cinema News

“IND v AUS: ஒருநாள் தொடர் – இந்திய அணி Players List அறிவிக்கப்பட்டுள்ளது!”

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளுக்கு KL ராகுல் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இரண்டு வெவ்வேறு அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.

அதன்படி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முழு பலம் வாய்ந்த அணியாக களமிறங்குகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். முதல் இரு போட்டிகளில் கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டி:

கே.எல்.ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

கடைசி ஒருநாள் போட்டி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல் (உடற்தகுதியை பொறுத்து), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அவருடன் நடிக்க விருப்பமில்லை…படக்குழுவுக்கு ஷாக் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி!

More in Cinema News

To Top