Connect with us

“ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக 100 பதக்கங்களை கடந்தது இந்தியா!”

Sports

“ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக 100 பதக்கங்களை கடந்தது இந்தியா!”

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 100 பதக்கங்களைத் தாண்டியுள்ளது. ஏற்கெனவே 94 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், 6 பதக்கங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. ஆடவர் கிரிக்கெட், ஹாக்கி, கபடி, வில்வித்தை, பேட்மிண்டன் ஆகிய பிரிவுகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

இதன்மூலம் 102 பதக்கங்களைத் தற்போது வரை வசமாகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியா 100 பதக்கங்களைக் கடந்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் 70 பதக்கங்கள் வென்றதே சிறந்த சாதனையாக இருந்தது.

ஏற்கெனவே 21 தங்கப் பதக்கம் வென்றும் சாதனை படைத்திருந்தது இந்தியா. தற்போது 100 பதக்கங்களை தாண்டியும் சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக 100 பதக்கங்கள் என்பது சாத்தியமற்றதாக பேசப்பட்டது.

ஆனால், குதிரையேற்றம், படகோட்டுதல் போன்ற பிரிவுகளில் எதிர்பாராத வெற்றிகள் கிடைத்ததுடன் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் தடகளத்திலும் இந்தியா பெரிய அளவிலான வெற்றிகளை பெற்றது. இதன்மூலம் முன்னெப்போதும் இல்லாத சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்திய வீரர்கள் இன்னும் சில போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் பதக்கங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "கடந்த 3 ஆண்டுகளாக நிறைய கஷ்டங்கள்…! Fight Club படம் குறித்து நடிகர் விஜய்குமார் உருக்கம்!"

More in Sports

To Top