Connect with us

“2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு! Viral!”

Sports

“2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு! Viral!”

எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரிட்டனில் இருந்து வெளிவரும் ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இந்த விளையாட்டு பட்டியலை உறுதி செய்துள்ளதாகவும். இது தொடர்பாக ஒலிம்பிக் திட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு, மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

கடந்த 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டு உள்ளது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. இத்தகைய சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த பரிந்துரை தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.

“லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். நூறாண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய விளையாட்டு மதிப்பீடு சார்ந்த செயல்முறையில் கிரிக்கெட் விளையாட்டுக்கு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு வழங்கிய ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சூழலில் மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வுக்கு பிறகு எடுக்கப்படும் இறுதி முடிவை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்” என ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே (Greg Barclay) தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரிங்கு சிங் தடாலடி ஆட்டம் : ஆஸ்திரேலியாவுக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி..!!

More in Sports

To Top