Bigboss Tamil 5
பிக்பாஸ் சீசன் 5 இறுதி நிகழ்ச்சிக்கு வராதது ஏன்..? பளிச் பதில் கொடுத்த இமான் அண்ணாச்சி…
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த வருடம் அக்டோபர் 4ம் தேதி உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கோலாகலமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 5வது சீசன். திட்டத்தட்ட 100 நாட்களை கடந்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி ஜனவரி 16ம் தேதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது .
இந்த சீசனில் வெற்றியாளராக மக்களின் மனம் கவர்ந்த ராஜு கோப்பையை தட்டி சென்றார் . நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே ராஜு முழு ஈடுபாடுடன் பங்குபெற்று அனைவர்க்கும் பிடிக்கும் வகையில் வலம் வந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ராஜுவுடன் அதிகம் இருந்தது இமான் அண்ணாச்சி தான், ஆனால் அவர் பைனல் நிகழ்ச்சிக்கு வரவே இல்லை.இதனால் நெட்டிசன்கள் பலர் அண்ணாச்சி ஏன் இறுதி நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று தொடர் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இமான் அண்ணாச்சி பேட்டி ஒன்றில் கூறிருப்பதாவது : பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு எனக்கு தொடர்ந்து பட சூட்டிங், டப்பிங் போன்ற வேலைகள் இருந்தது.
இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏழு நாட்கள் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. படப்பிடிப்பு, டப்பிங் போன்றவற்றில் நான் பிசியாக இருந்ததால் என்னால் தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை.
இதனால் தான் இறுதி நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை என இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
