Connect with us

யோகி பாபுவின் ‘பொம்மை நாயகி’ படம் எப்படி இருக்கு..! திரைவிமர்சனம்..

Cinema News

யோகி பாபுவின் ‘பொம்மை நாயகி’ படம் எப்படி இருக்கு..! திரைவிமர்சனம்..

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பா. ரஞ்சித் . அதன் பின் கார்த்தியை வைத்து அவர் எடுத்த மெட்ராஸ் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பினை தந்தது. இதையடுத்து இவருக்கென தனி பாணியுடனே படங்களை இயக்கி வந்தார் .

இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இவர் தயாரிக்கும் படங்களும் சரி இயக்கும் படங்களும் சரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது இவரது தயாரிப்பில் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் பொம்மை நாயகி. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருந்த பொம்மை நாயகி எந்த அளவிற்கு வந்துள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தனது மனைவி மற்றும் மகள் பொம்மை நாயகியுடன் வாழ்ந்து வருகிறார் நம்ப நாயகன் யோகி பாபு . அதே பகுதியில் யோகி பாபுவின் அண்ணன் அருள்தாஸ் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

யோகி பாபு தனது தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் என்பதால் அவரது அண்ணன் அவருடன் சற்று விலகியே இருந்து வருகிறார் . அதற்கு மற்றொரு முக்கிய காரணம் யோகி பாபுவின் தாய் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பது தான் .

கடலூரில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் யோகி பாபு, அவருடைய முதலாளிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் வேலையில்லாமல் தவித்து வந்துள்ளார் . இந்த சமயத்தில் ஊர் திருவிழா கோலாகலமாக நடக்கிறது.

இதே வேளையில் யோகி பாபுவின் மகள் பொம்மை நாயகியிடம் இரண்டு காம கொடூரர்கள் தவறான முறையில் நடந்துகொள்கிறார்கள். இதை பார்த்து அதிர்ச்சியடையும் யோகி பாபு உடனடியாக அவர்களை அடித்து உதைக்கிறார் .

பின்னர் இந்த பிரச்சனைக்காக காவல்துறையிடம் புகார் அளிக்க செல்கிறார் யோகி பாபு. எல்லா படங்களிலும் வருவது போல் காவல் துறை அந்த புகாரை வாங்க மறுக்கிறார்கள். இதனால் நீதிமன்றத்தில் புகாரளிக்கும் யோகி பாபு, அவர்களுக்கு போராடி தண்டனையும் வாங்கி தருகிறார்.

எல்லாம் முடிந்தது வேலையை பார்க்கலாம் என்று நினைக்கும் சமயத்தில் மேல் முறையீடு செய்து வெளியே வந்த அந்த காம கொடூரர்கள் யோகி பாபுவை பழிவாங்க நினைக்கிறார்கள். இதன்பின் யோகி பாபுவின் வாழ்க்கையில் என்ன நடந்தது? அந்த துஷ்டர்களால் வரும் பிச்சனைகளை அவர் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை.

அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும் சாதி ஒருவரை எப்படி மாற்றிவிடுகிறது என்பதை மிகவும் துல்லியமாக காட்டியுள்ளார் படத்தின் இயக்குனர் . இருப்பினும் , முதல் பாதியில் இருந்த வேகமும் பரபரப்பும் இரண்டாவது பாதியில் பெரிதாக இல்லை. எதிர்பார்ப்பு பெரிதாக இருந்தாலும் படத்தின் முடிவோ அந்த அளவிற்கு வரவில்லை என்பது தான் உண்மை .

See also  "Nikhil 20 First Look வெளியானது! சக்திவாய்ந்த படமா இருக்குமா?!"

மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய படமாக அமைந்துள்ளது யோகி பாபுவின் பொம்மை நாயகி

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top