Connect with us

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் புதிய படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் புதிய படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு எனும் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். அந்த படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்க உள்ளார். ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் வெளியாகும் ஏழாவது படம் இது.

எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு என தொடர்ச்சியாக நல்ல படங்களை தயாரித்து வரும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் படத்தைத் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், படத்தில் பணியாற்றும் இதர நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top