கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் .!!

0
370
curry leaves
curry leaves

தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக உணவில் கருவேப்பிலை வந்தால் அதை ஒதுக்கி விட்டு சாப்பிடுவது பழக்ககமாக கொண்டு உள்ளனர்.

வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 2, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளன கறிவேப்பிலையில் . காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, இருதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

curry leaves benefits
curry leaves benefits

அதிக சோர்வு, ரத்தச் சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்தச் சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்த சோகை நீங்கும். மேலும் கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் தூண்டும்

curry leaves benefits
curry leaves benefits

தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். செரிமான பிரச்சினையை உள்ளவர்கள் கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினைகள் நீங்கிவிடும். மேலும் முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

தினமும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகள் வெளியேறிவிடும். சளித்தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பு ன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் சளி முறிந்து வெளியேறிவிடும்.