Connect with us

ஹர்காரா படத்தின் Detailed விமர்சனம்…படம் எப்படி இருக்கு…முதல் போஸ்ட் மேன் நம்மிடையே வந்தாரா இல்லையா..?

Movie Reviews

ஹர்காரா படத்தின் Detailed விமர்சனம்…படம் எப்படி இருக்கு…முதல் போஸ்ட் மேன் நம்மிடையே வந்தாரா இல்லையா..?

ஹர்காரா படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்… நாம் பயன்படுத்தும் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் வருவதற்கு முன்பு பெரிய அளவில் பயன்பட்டது கடிதங்கள்தான் இது அனைவருமே அறிந்த ஒன்றாகும்..இந்த கடிதங்களை கொண்டு வரும் தபால்காரர் சென்ற தலைமுறை வரை மிக முக்கியமாக பார்க்கப்பட்டார்.

நம் வாழ்வில் தவிர்க்க முடியாத மனிதராக இருந்த தபால்காரரை பற்றிய படமாக வந்துள்ளது இந்த ஹர்காரா. ஹர்காரா என்றால் தபால்காரர் என்று பொருள் உள்ளது…

தேனி மாவட்டத்தில் மலைகிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் புதிய போஸ்ட் மேனாக வேலைக்கு சேருக்கிறார் காளி வெங்கட்… மக்கள் இவர் மீது அன்பு வைத்திருந்தாலும் இந்த கிராமத்தில் பணி செய்ய இவருக்கு விருப்பமில்லை என்பது போல கதை அமைந்துள்ளது…

தபால் நிலையத்தை மூட கலெக்டருக்கு மனு போடுகிறார்.இந்த சூழ்நிலையில் ஊர் பெரியவர் ஒருவர் மூலம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைகிராமத்தின் முதன் முதலில் வாழ்ந்த மாதேஷ்வரன் என்ற ஹர்காராவை பற்றி தெரிந்து கொள்கிறார்.

இவர் யார் இந்த முதல் ஹர்காரா செய்த விஷயம் என்ன என்பது பற்றி படம் சொல்கிறது இது அவரின் முடிவை என்ன செய்தது என்படுத் இந்த கதை…அதிகம் சினிமாவில் சொல்லப்படாத தபால்காரரை பற்றி சொல்லியதற்காக டைரக்டர் ராம் அருண் காஸ்ட்ரோவை பாராட்டலாம் நலன் ஒரு கதைக்களம்.

போஸ்ட் மேன் என்பவர் கடிதம் மட்டும் தருபவர் இல்லை மக்கள் தங்கள் வீட்டின் ஒரு ஆளாக பார்க்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் டைரக்டர். திரைக்கதை மெதுவாக சென்றாலும் ரசிக்க முடிகிறது. காட்சிகள் அனைத்தும் சினிமாவுக்காகான மிகைப்படுத்தல் இல்லாமல் எதார்த்தமாக உள்ளது மொத்தத்தில் இது ஒரு நல்ல படைப்பு என்று தான் சொல்லவேண்டும்..சில தோய்வுகள் இருந்தாலும் சிறப்பான படமாக தான் அமைகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வீட்டிற்கு சென்று அழுதேன்…அப்படி ஒரு காட்சியில் நடித்தது என் வாழ்வில் மறக்கவே முடியாது!

More in Movie Reviews

To Top