Connect with us

ஹன்சிகா திருமண சடங்குகள் ஆரம்பம்.. சிவப்பு நிற சேலையில் ஜொலிக்கும் அழகு.. வைரலாகும் வீடியோ..!!

Cinema News

ஹன்சிகா திருமண சடங்குகள் ஆரம்பம்.. சிவப்பு நிற சேலையில் ஜொலிக்கும் அழகு.. வைரலாகும் வீடியோ..!!

ஹன்சிகா மோத்வானி திருமணம் விரைவில் நடக்க உள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய சடங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய படங்களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும் ஹன்சிகாவுக்கும், அவரின் பிசினஸ் பார்ட்னரும்-நண்பருமான சொஹைர் கதூரியாவுக்கும் இடையே வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.

இந்த திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள அரண்மனையில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை அரண்மனையில் திருமண விழா நடக்க உள்ள நிலையில், இதில் இரு வீட்டாரும், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரும் மட்டும் தான் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில், திருமணம் ஜெய்பூரில் நடந்தாலும், தனது திருமண சடங்குகள் மும்பையில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்பதில் மணப்பெண் ஹன்சிகா மோத்வானி உறுதியாக இருந்தாராம். இதனால் நேற்று இரவு துர்கா மாதாவுக்கு விளக்கேற்றி வைக்கும் சடங்குடன் திருமண நிகழ்ச்சிகள் மும்பையில் தொடங்கியுள்ளது.

துர்கா மாதா பூஜைக்காக, சிவப்பு நிற சேலையில் மிகவும் அழகாக சென்ற ஹன்சிகா, காரில் சிரித்த முகத்துடன் இருக்கும்போது எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில், டிசம்பர் 2 ஆம் தேதி முதல் அரண்மனையில் சடங்குகள் நடக்க உள்ளன. 2 ஆம் தேதி சுஃபி நைட் என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதையடுத்து டிசம்பர் 3 ஆம் தேதி மெஹந்தி மற்றும் சங்கீத் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும் 4 ஆம் தேதி காலை திருமணத்திற்கு முன்பு ஹல்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு பிறகு திருமணம் நடத்தப்பட்டு, அன்று மாலை விருந்தினர்களுக்காக போலோ மேட்ச், கசினோ தீம் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளும் சொஹைல் கதூரியாவுக்கு ரிங்கி என்கிற பெண்ணுடன் கடந்த 2016ம் ஆண்டு கோவாவில் முதல் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் மணப்பெண்ணான ரிங்கியின் தோழியான ஹன்சிகா கலந்துகொண்டு, பார்ட்டியிலும் பங்கேற்று டான்ஸ் ஆடினார்.

ஹன்சிகாவின் அந்த டான்ஸ் வீடியோ வைரலான நிலையில், தோழியின் முன்னாள் கணவரையா இரண்டாம் தாரமாக ஹன்சிகா திருமணம் செய்து கொள்கிறார் எனறு அவரது ரசிகர்கள் சிலர் புலம்பினாலும், அனைவரும் ஹன்சிகாவின் திருமணத்திற்காக வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top