Connect with us

ஹன்சிகாவின் அடுத்த படமான மை நேம் இஸ் ஸ்ருதி பட டீசர் வெளியானது…!

Trailers

ஹன்சிகாவின் அடுத்த படமான மை நேம் இஸ் ஸ்ருதி பட டீசர் வெளியானது…!

தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி சினிமாவில் பிரபல முன்னணி ஹீரோயினாக வளம் வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக இருந்து படிப்படியாக இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழில் பொருத்தவரை தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி,சிம்பு உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Hansika Motwani's film 'My Name Is Shruti' launched in Hyderabad

இவர் நடிப்பில் மஹா, 105 மினிட்ஸ் ஆகிய பல படங்கள் உருவாகி ரிலீசுக்காக காத்து கொண்டிருக்கின்றன.தமிழில் கொஞ்சம் காலமாகவே காணாமல் போன ஹன்சிகா தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு,மற்றும் தெலுங்கு திரையுலகில் சென்று பிஸியாக மாறியுள்ளார்.

அடுத்ததாக இயக்குனர் J.M.ராஜ சரவணன் இயக்கத்தில் உருவாகும் ரவுடிபேபி படத்தில் நடித்து வரும் ஹன்சிகா மோட்வானி நடிப்பில் அடுத்த படமாக தயாராகியுள்ளது மை நேம் இஸ் ஸ்ருதி.

Hansika Motwani - Wikipedia

வைஷ்ணவி ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் புருகு ரம்யா பிரபாகர் தயாரிப்பில் தெலுங்கில் தயாராகியுள்ள மை நேம் இஸ் ஸ்ருதி படத்தை இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஓம்கர் இயக்கியுள்ளார். கதாபாத்திரத்தின் ஹன்சிகா நடிக்க அவருடன் இணைந்து பிரேமா, முரளி சர்மா, ஆடுகளம் நரேன், பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரா, பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் மை நேம் இஸ் ஸ்ருதி படத்தின் டீசரை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.

More in Trailers

To Top