Connect with us

“மீண்டும் வினோத் – அஜித் கூட்டணி” ஸ்பெஷல் அப்டேட் இதோ…

Cinema News

“மீண்டும் வினோத் – அஜித் கூட்டணி” ஸ்பெஷல் அப்டேட் இதோ…

இயக்குனர் வினோத் மீண்டும் நடிகர் அஜித் உடன் 4-வது முறையாக இணைவது குறித்து பேசியுள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் H. வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.அதன் பிறகு இப்போது துணிவில் துணிவாக சேர்ந்தது இது..

வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான ‘துணிவு’ படம் பொங்கலை முன்னிட்டு கடந்த வெளியானது.

‘துணிவு’ படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், மோகனசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் H. Vinoth Fans Festival நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு வினோத் பதில் அளித்தார். குறிப்பாக AK கூட மூன்று படம் பண்ணிட்டீங்க. அஜித் ரசிகர்கள் உங்களை மிஸ் பண்றோம்.

உங்களை மிஸ் பண்ணாம இருக்க நான்கவதா ஒரு படம் கிடைச்சா எந்த மாதிரியான படம் பண்ணுவீங்க என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த வினோத், இப்போ என்கிட்ட கதை எதுவும் எழுதவில்லை. நானும் அஜித் சாரும் இரண்டு படம் பண்ண முயற்சி செய்தோம்.

நான் முதல் முறையாக அஜித் சாரை சந்தித்த போது கான் மேன் கதை சொன்னேன். அது அப்படியே இருக்கு. இன்னொரு கதை, நேர்கொண்ட பார்வை படம் முடிந்த பிறகு முழு படமும் ஐரோப்பாவில் நடப்பது போல முதல் 10 நிமிடம் தவிர்த்து 1:30 மணி நேரமும் ஆக்சன் படமாக இருக்கும் படம் அது‌.அந்த ஐரோப்பாவில் நடக்கும் கதையை படம் பண்ண முயற்சி செய்வேன் என வினோத் பதில் அளித்தார்.இது ரசிகர்களுக்கு ஒரு செம அப்டேட் என சொல்லியுள்ளனர் சீக்கிரமாக அது நடக்குமா என பலர் கேட்கின்றனர்.. பாப்போம் பொறுத்திருந்து..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top