Connect with us

உடல் முழுக்க தங்க நகை போட்டுட்டு ஜி.பி. முத்து ஆடிய ஆட்டம் …வைரலாகும் வீடியோ

Cinema News

உடல் முழுக்க தங்க நகை போட்டுட்டு ஜி.பி. முத்து ஆடிய ஆட்டம் …வைரலாகும் வீடியோ

டிக்டாக் பிரபலமடைந்த போது தனது நெல்லை தமிழால் “ஏலேய் செத்த பயலே, நார பயலே, கிழிச்சிபுடுவேன்” என திட்டி தீர்த்தே பிரபலமானவர் ஜி.பி.முத்து. மரத்தொழில் நடத்தி வந்த இவர் பார்ட்டைமாக டான்ஸ் ஆடியும், பாட்டு பாடியும் வீடியோ போட்டார். நாளடைவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதையடுத்து முழு நேரமும் டிக்டாக்கில் தனது நேரத்தை செலவிட்டார் ஜி.பி. முத்து. அவரை பெரும்பாலானோர் கிண்டல் செய்தே கமென்ட் போட்டனர். அதற்கு இவர் பதிலடி கொடுக்கும் போது மேற்கண்ட வார்த்தைகளை பயன்படுத்துவார். அது மேலும் இவரை பிரபலமாக்கியது.

ஆனாலும் மக்கள் அதை தான் விரும்பி பார்க்கின்றனர். ஆதரவு தருகின்றனர். அள்ளித்தருகின்றனர். இதனால், ஜி.பி.முத்து தன் பாணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தான், டிடிஎப் வாசனுடன் ஆபத்தான பைக் பயணம் சென்று, தமிழ்நாடு முழுக்க பேசும் பொருளாக மாறிய ஜிபி முத்து, அந்த சம்பவத்தால், வாசன் மீது எப்.ஐ.ஆர்., போடும் அளவிற்கு நிலை சென்றதற்கு தானும் ஒரு காரணம் என்பதை அறியாமலேயே அடுத்த டூருக்கு கிளம்பிவிட்டார்.

அதன் பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.பி.முத்து, துபாயை ஒரு ரவுண்ட் அடித்தார். குறிப்பாக அரபு உடை அணிந்து, பாலைவனத்தில் வலம் வந்ததும், ‛உயிரின் உயிரே…’ பாடலை போட்டு ரீல்ஸ் செய்ததும், சுவாரஸ்யமாக இருந்தது. தொடர்ந்து துபாயின் உணவுகள், இடங்கள் என அனைத்தையும் ரசித்து ருசித்த ஜி.பி.முத்து, அது தொடர்பான வீடியோக்களை அடுத்தடுத்து பதிவிட்டு வருகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top