ஒரு ஆப்பிள் எடையில் பிறந்த உலகின் சின்னஞ்சிறிய குழந்தை.இன்னும் உயிர்வாழும் அதிசியம்.

0
101

ஒரு பெரிய ஆப்பிள் எடை, பெரிய சோப்பின் அளவில்தான் அந்த சின்னஞ்சிறிய குழந்தை பிறந்தது. பிறந்து ஒரு மணிநேரத்தில் இறந்துவிடும் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட அந்த சிசு இன்று 6 மாதங்களைக் கடந்து உலகில் வெற்றிகரமாக வாழத் தொடங்கியுள்ளது.
உலகிலேயே மிகச்சின்னஞ்சிறிய அளவில் பெண் குழந்தை பிறந்து உயிருடன் வாழ்ந்து வருவது இதுதான் முதல்முறையாகும். இது கின்னஸிலும் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சான்டியோகோ நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்போது எடை வெறும் 245 கிராம்(8.6அவுன்ஸ்)அதாவது பெரிய சைஸ் ஆப்பிளின் எடை அளவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சான்டியாகோ நகரில் உள்ள ஷார்ப் மேரி பிர்ச் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கர்பிணிப்பெண் அனுமதிக்கப்பட்டார். அவரின் வயிற்றில் வளரும் ஆபத்தான நிலையில் இருப்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் தாய்க்கும் ஆபத்து என்ற நிலையில் இருந்தது.

இதையடுத்து, தீவிர பிரசவ அறையில் சேர்க்கப்பட்டு அந்த கர்பிணி்க்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டது. குழந்தை பிறந்தபோது, 245 கிராம் எடை அளவில் இருந்தது.

ஏறக்குறைய தாயின் வயிற்றில் இருந்து 23 வாரங்கள், 3 நாட்களுக்கு முன்பாகவே குழந்தை வெளியே எடுக்கப்பட்டதால், அந்த குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்தில் இறந்துவிடும் என்று தாயிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், மருத்துவர்களே வியக்கும் அதிசயம் அதன்பின்புதான் நிகழ்ந்து. ஒருமணிநேரம் கடந்தது, 6 மணிநேரம் கடந்தது, ஒருநாள் கடந்தது, 2 நாட்கள் கடந்தது மருத்துவர்களின்தொடர் சிகிச்சையால் குழந்தை தனது உயிரைதக்க வைக்க தொடர்ந்து போராடியது. அதன்பின் மருத்துவர்களும், செவிலியர்களும் குழந்தையை எப்படியாவது இனிமேல் வாழ வைக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் குழந்தையை இரவுபகல் பாராது கவனித்தனர்.

அந்த குழந்தைக்கு செல்லமாக “சேபி” என்று செல்லமாகப் பெயரிட்டு மருத்துவமனை நிர்வாகம் அழைக்கத் தொடங்கியது.

ஏறக்குறைய 6 மாத காலம் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து இந்த மாத தொடக்கத்தில் தாயுடன், குழந்தையை பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். அப்போது 245 கிராம் எடையில் இருந்த சின்னஞ்சிறிய சிசு தாயுடன் நலமுடன் வீட்டுக்குச் செல்லும்போது 2.200 கிலோகிராம் எடை இருந்தது.

அந்த குழந்தையை தாயுடன் அனுப்பி வைக்கும் போது, அந்த குழந்தையை கவனமாகப் பார்த்துக்கொண்ட நர்ஸ்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது.

குழந்தையை கவனமாகப் பார்த்துக்கொண்ட நர்ஸ் கிம் நார்பி கூறுகையில், ” உண்மையிலேயே இது கடவுளின் அதிசயம்தான் என்று சொல்லுவேன். குழந்தை சிறியவள்தான் தான் அதன் தன்னம்பிக்கை வானளவு பெரியது” எனத் தெரிவித்தார்.

மற்றொரு நர்ஸ் எம்மா வீஸ்ட் கூறுகையில், ” சேபீ பிறந்தபோது ஆப்பிள் எடையில்தான் இருந்தாள். அவளுடைய படுக்கையில் இருக்கிறாளா என்பதுகூட தெரியாது. குழந்தைகளின் ஜீஸ் பாக்ஸ் போன்ற அளவில்தான் இருந்தாள். உள்ளங்கையில் அவளை அடக்கிவிடலாம்.

சேபி அழும்போது அவளின் குரல்கூட வெளியே கேட்காது. ஆனால், அவளின் குரலைக் கேட்பது நமக்கே நம்பமுடியாத அளவுக்கு இருக்கும். சேபி இன்று நலமுடன் இருப்பது இறைவனின் படைப்பில் அதிசயம்” எனத் தெரிவித்தார்.
மருத்துவர்கள் கூறுகையில், ” சேபிக்கு உண்மையில் போராடும் குணம் அதிகம். 28 வாரங்களுக்கு முன் உலகில் பிறந்து வாழ்ந்துகாட்டியுள்ளார். மருத்துவத்துறையில் மிகப்பெரிய மைல்கல். பிறந்தபோது மூளையில் சிறிய அளவு பிரச்சினை, நுரையீரல், இதயப் பிரச்சினை இருந்தது. ஆனால், அனைத்தும் தீவிர சிகிச்சையால் சரியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here