3 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன கணவனை டிக் டாக் விடீயோவின் மூலம் கண்டுபிடித்த மனைவி!!!

0
101

2017 ஆம் ஆண்டு சுரேஷ் விழுப்புரத்தில் உள்ள தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு தனியாக சென்றுவிட்டான். அதன் பின் அவன் வீடு திரும்பாததை உணர்ந்த அவரது மனைவி ஜெயப்பிரபா காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

காவல் துறையினரும் தேடி அவர் எங்கும் கிடைக்கவில்லை. அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கூட தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் தனியாக சென்று விட்டார் அவர். இதனால் மனமுடைந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தனியாகவே வசித்துவந்துள்ளனர்.

அதன் பின் சமீபத்தில் ஜெயபிரபா தனது மொபைல் போனில் டிக் டாக் செயலியை பதிவேற்றி அதில் விடீயோக்களை பார்த்து வந்துள்ளார். அப்படி பார்க்கும் போது ஒரு வீடியோவில் அவரின் காணாமல் கணவர் சுரேஷ் நடித்துள்ளார். இதனை கண்ட ஜெயபிரபா காவல் துறையினரிடம் அந்த விடியோவை காட்டியுள்ளார். அதன் மூலம் காவல் துறையினர் சுரேஷ் ஐ கண்டுபிடித்துள்ளனர்.

சுரேஷ் ஓசூரில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் வேலைபார்த்துக்கொண்டு வசித்து வந்துள்ளார். அவரை பிடித்து பின் அவரின் மனைவியிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here