தன் கணவரின் தலையை வெட்டி கேரிபேக்கில் போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பெண்!!!

0
87

அசாம் மாநிலத்தில் லக்கிம்பூர் என்ற ஊரில் பெண் ஒருவர் தன் கணவர் தினமும் தன்னை உடல்ரீதியாகவும் , மன ரீதியாகவும் பல ஆண்டுகளாக கொடுமை செய்து வந்ததால் அன்று அவரின் தலையை வெட்டி போலீசில் சரணடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குணேஸ்வரி என்ற அந்த பெண் முதிரம் என்ற தன் கணவனுடன் வாழ்ந்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு அவர் தனது கணவரின் தலையை ஒரு பிளாஸ்டிக் பேக்கில் போட்டு தல்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இது குறித்து போலீஸ் விசாரிக்கும் பொது, ” பல வருடங்களாக தன்னை தன் கணவர் கொடுமை செய்து வந்ததாகவும் அதனை தான் தனது குழந்தைகளுக்காக பொறுத்து கொண்டதாகவும் கூறினார். அவருக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். அதில் 2 ஆண் பிள்ளைகளும், 3 பெண் குழந்தைகளும் அடங்குவர். சம்பவம் நடந்த அன்று கணவர் குடித்துவிட்டு தன்னை மிகவும் கொடுமை படுத்தியதால் அதனை தாங்க முடியாத அவர் அரிவாளால் தனது கணவரின் தலையை வெட்டி உள்ளார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here