வீடியோ :சாலையில் தேங்கிய இருந்த நீரை மண்வெட்டி கொண்டு அகற்றிய காவலர்..!

0
110

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அங்கு உள்ள ஒரு சாலையில் மழைநீர் தேங்கி இருந்தது. சாலையில் உள்ள நீரை மண்வெட்டியுடன் அகற்றும் பணியில் போக்குவரத்து காவலர் ஒருவர் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையில் தேங்கியுள்ள நீரை தனி ஒருவராக அகற்ற முயற்சி செய்த அந்த போக்குவரத்து காவலரை பலர் பாராட்டி வருகின்றனர்.மேலும் பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ் தனது பாராட்டு தெரிவித்தார்.


https://twitter.com/AkshayVandure1/status/1177182634687942656?s=20