“எங்களைக் காப்பாத்திக்க துப்பாக்கி வேணும்” – கோவை கலெக்டரிடம் கல்லூரி மாணவி மனு!!

0
178

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தக் கொடுமையைச் செய்த முக்கிய குற்றவாளிகளாக நான் அவர்களை சில தினங்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தது. வி

சாரணையை துரிதப்படுத்த வழக்கை சிபிசிஐடி இடம் ஒப்படைக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இதனால் முதல்கட்டமாக திருநாவுக்கரசு வீட்டில் சோதனை இடப்பட்டு பல ஆதாரங்களையும் கைப்பற்றியது சிபிசிஐடி.

அடுத்த கட்டமாக மீதமுள்ள குற்றவாளிகளின் வீடுகளிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இன்று கோவை கலெக்டரிடம் சில கல்லூரி மாணவிகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள, மேலும் இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.

இந்த மனு தமிழகத்தில் உள்ள பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இதனால் பல பெண்கள் இதே முடிவை எடுக்க தயாராகி வருகின்றன.