பைக்குக்கு 11,000 அபாரதம் விதித்த போலீஸ்! கொழுத்திய பொது மக்கள்!

0
50

டெல்லியில் குடிபோதையில் பைக் ஓட்டி வந்த நபர் போலீசாருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் தனது பைக்கிற்கு தீவைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் அமலுக்கு வந்தது .இந்த சட்டம் டெல்லியிலும் அமலுக்கு வந்தது.அன்று முதலே விதிகளை மீறுவோரிடம் பராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தான் போக்குவரத்து விதிகளை மீறிய ஒருவரிடம் நேற்று போலீசார் அபராதம் விதித்தனர்.

ஆனால் அந்த நபர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.இதனை அடுத்து  வாக்குவாதத்தில்  ஈடுபட்டு தனது பைக்கிற்கு தீவைத்தார். இதனையடுத்து தீவிபத்து குறித்துதகவல் அளித்த பின்னர் சம்ப இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.பின்னர் போலீசார் அளித்த தகவலில் ,குடிபோதையில் வந்த நபரிடம் ரூ.11000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை மட்டுமே செய்ததாக கூறினார்கள்.ஆனால் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பைக்கிற்கு தீவைத்ததாக கூறினார்கள்.