தொடர்ந்து 6 மணி நேரம் PUBG கேம் விளையாடிய சிறுவனுக்கு நடந்த சோகம்..

0
231

தற்போது சிறுவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் பலரும் அடிமாகியுள்ள மொபைல் கேம் தான் PUBG .
அனைவரையும் இருக்கும் இந்த விளையாட்டை பலரும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் 16 வயதான மாணவன் ஒருவன் தொடர்ந்து 6 மணி நேரம் இந்த விளையாட்டை விளையாடி உயிரிழந்துள்ளான். பியூர்கன் குரைஷி என்ற அந்த மாணவன் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். மாணவன் மற்றும் அவரது குடும்பம் ராஜஸ்தானில் குடிபெயர்ந்துள்ளனர்.

சம்பவத்தன்று அவரது பெற்றோர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நீமுச் நகருக்கு சென்றுள்ளனர். PUBG விளையாடுவதை வழக்கமாக கொண்ட அந்த மாணவன் வீட்டில் தனியாக இருந்து தொடர்ந்து 6 மணி நேரம் அந்த விளையாட்டை விளையாடியுள்ளான். இறுதியில் அவர்களின் பெற்றோர் வீடு திரும்பும் போது மாணவன் இறந்து கிடந்துள்ளான். இதை மருத்துவமனையில் விசாரிக்கும் போது மாணவன் மனர்த்தியாக அதிகம் பாதித்து அந்த விளையாட்டுக்கு அடிமையாகி இறுதியில் இறந்து விட்டான் என தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவனது தந்தை , ” என் மகன் தொடர்ந்து இடைவிடாது அந்த விளையாட்டையே விளையாடிக்கொண்டிருப்பான். அது மட்டுமல்லாமல் அதை விளையாடும் பொது அவனை சூடு அவனை கொன்றுவிடு என கத்துவான் எனவும் கூறினார். எனவே இந்த விளையாட்டை யாரும் விளையாடாதீர்கள். என் மகனைப் போலவே நீங்களும் உங்களின் குழந்தைகளை இழந்துவிடாதீர்கள் என தெரிவித்தார்.”