விமானத்தில் விண்டோ சீட்டிற்காக சண்டையிட்ட பயணிகள்-வேடிக்கை வீடியோ

0
161

பயணம் என்றாலே அழகானது தான்,அதிலும் விண்டோ சீட்டில் ரசித்து கொண்டபடியே பயணித்தால் பேரின்பம் தான்.ஆனால் எப்பொழுதும் பயணத்தின் போது அடிக்கடி சண்டை வருவதும் இந்த விண்டோ சீட்டில் தான்.அ

அந்த வகையில் பேருந்து ,ரயிலில் எல்லாம் விண்டோ சீட்டிற்காக சண்டை போட்டு பார்த்திருக்கலாம்,ஆனால் இங்கு விமானத்திலேயே சண்டை போட்டு பார்த்தது உண்டா.

அப்படி சமூக வலைதளத்தில் அதிகமா வைரலான ஒரு வீடியோவில் இரண்டு நபர்கள் விமானத்தின் ஜன்னலுக்காக சண்டையிட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அது
அடிதடியில் முடிவடையாமல் போன வரை நல்லது.

அந்த வீடியோவை படம் பிடித்தவர் விமானத்தின் ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துள்ளார். அவருக்கு முன்னர் அமர்ந்திருப்பவருக்கு அருகில் இருக்கும் ஜன்னலின் திரையை மூடுகிறார். இதனை கண்டு எரிச்சலடையும் அருகில் இருக்கும் சக பயணி ஒருவர் உடனடியாக அதனை திறந்துவிடுகிறார்.