11 மாதம் கழித்து ஜாமீனில் வெளிவந்த நிர்மலா தேவி!!!

0
200

கடந்தாண்டு தமிழகத்தையே உலுக்கு சம்பவம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் நடைபெற்ற சம்பவம். தேவாங்கர் கலைக் கல்லூரியின் பேராசிரியரான நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்து செல்வதாக புகார்கள் எழுந்தன. அந்நேரத்தில் கல்லாரி மாணவிகள் நிர்மலா தேவியுடன் செல்போனில் உரையாடும் ஆடியோவை வெளியிட்டனர். இந்த சம்பவம் தமிழ் நாடு முழுவதும் தீயாய் பரவியது.

அப்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரை விசாரிக்கும் போது இதில் பல பெரும் புள்ளிகள் பங்குவகிப்பதாக தெரிந்தது. கவர்னருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் இது பொய்யான தகவல் என கவர்னர் மறுத்துவிட்டார். அதன் பின் சிறையில் அடைக்கப்பட்டார் நிர்மலா தேவி. பலமுறை ஜாமீனுக்கு விண்ணப்பித்தார் இவர். கடைசியில் இன்றைய தினம் இவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதன் மூலம் 11 மாதங்களுக்கு பின் வீடு திரும்பினார் இவர்.