அதிக பணம் கொடுத்து 2019 நீட் தேர்வுக்கு படித்தும் முதல் 50 இடத்தில் தமிழக மாணவர் ஒருவருமே இல்லை.!

0
176

நீட் தேர்வு தமிழநாட்டில் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது . தமிழ்நாட்டில் இந்த முறை 48.57 சதவீதம் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடம் , 39.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்த வருடம் போன வருடத்தை விட , தமிழக மாணவர்களில், 9.01 சதவீதம் அதிக தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்திலிருந்து 1.23 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். அதில் 59 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்தநிலையில் முதல் 50 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்த மாணவரும் இல்லை. ராஜஸ்தானை சேர்ந்த, நளின் கந்தேல்வால் மொத்தமுள்ள 720க்கு, 701 மதிப்பெண் பெற்று, இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஸ்ருதி, அகில இந்திய அளவில் 57வது இடம் பிடித்துள்ளார். இவர், 685 மதிப்பெண் பெற்றுள்ளார்.

நீட் தேர்வு வந்த பிறகு பல இடங்களில் போலியன கோச்சிங் சென்டர் உள்ளன மாணவர்கள் நீட் தேர்வு படிப்பதற்க்காக சரியான சென்டரை தேர்வு செய்யவேண்டும் , அதிக பணம் கொடுத்து தமிழக மாணவர்கள் தயாரானாலும் கூட, இன்னும் போதிய அளவுக்கான தேர்ச்சியையோ, மதிப்பெண்களையோ பெறுவதில் சறுக்கி வருகிறார்கள் என்பதைத்தான் இந்த புள்ளி விவரம் எடுத்துக் காட்டுகிறது.