உலகின் மிகவும் அபாயகரமான லேப்டாப் விற்பனைக்கு-அப்படி அதில் என்ன இருக்கிறது.

0
112

உலகின் மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படும் லேப்டாப் ஒன்று 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்பனைக்கு உள்ளது. மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படும் 6 வைரஸ்கள் நிறைந்த இந்த லேப்டாப் ஏலத்துக்கு வந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சேதாரம் ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் XP சாஃப்ட்வேரின் கீழ் இயங்கும் இந்த லேப்டாப் தான் உலகின் அபாயகரமான லேப்டாப் மட்டுமல்ல அபாயகரமான இயந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த 10.2 இன்ச் சாம்சங் NC10 லேப்டாப் ஏலம் விடப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விலையே 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.இதில் உள்ள அபாயகரமான வைரஸ்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க இந்த லேப்டாப் தற்போது காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. The Persistence of Chaos என்ற இணையதளத்தில் இந்த லேப்டாப்-க்கான ஏலம் ஆன்லைனில் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here