டிக் டாக்-ல் வீடியோ தொடர்ந்து வெளியிட்டதால் மனைவியை கத்தியால் குத்திய கணவன்…

0
161

கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் தொடர்ந்து டிக் டாக்கில் விடீயோக்களை பதிவிடுவது மற்றும் அதிகமாக செல்போனில் பேசுவதால் அவரது கணவன் கல்லூரி வளாகத்தில் வைத்தே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

கோவை குத்துப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கனகராஜ் மற்றும் நந்தினி தம்பதியினர். இதில் நந்தினிக்கு அதிகமாக டிக் டாக் இல் வீடியோ பதிவேற்றுவது பிடிக்கும். எனவே அதிகமாக விடீயோக்களை வெளியிட்டுள்ளார். ஆனால் இது அவரின் கணவருக்கு பிடிக்காததால் அவரை கண்டித்துள்ளார் அவர். அதுமட்டுமின்றி செல்போனில் அடிக்கடி பேசியும் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று தன் மனைவிக்கு ரொம்ப நேரமாக செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார் இவர். ஆனால் அவருக்கு பிஸி என்றே வந்துள்ளது. இதனால் ஆத்திரத்துடன் கல்லூரிக்கு சென்ற அவரது கணவர் அங்கு தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது முற்றிவிடவே இறுதியில் கத்தியால் தனது மனைவியை குத்தி கொலை செய்துள்ளார் .