ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் தலைக்கு பின் கொம்பு முளைத்துவிடும் !!! ஆராய்ச்சி முடிவில் அதிர்ச்சி தகவல்…

0
177

தற்போது உலகம் முழுவதும் அனைவரும் ஸ்மார்ட்போனிகளையே உபயோகித்து வருகின்றனர். பட்டன் மொபைல்களை தற்போது பார்ப்பதே அரிது. பெரும்பாலும் அனைத்து மொபைல் நிறுவனங்களும் அதை தயாரிப்பதையே நிறுத்திவிட்டனர். தற்போது மொபைல் போனில் இன்டர்நெட் வசதிகளை அனைவரும் பயன் படுத்த துவங்கிய பின்னர் பெரும்பாலும் அனைவரும் அந்த மொபைலிலேயே மூழ்கிவிடுகிறோம்.

மொபைல் இல்லாமல் தற்போதய காலகட்டங்களில் ஒருநாள் வாழ்வதே கடினம் என்ற நிலையும் வந்துவிட்டது. ரோட்டில் நடந்து செல்லும்போது கூட பெரும்பாலானோர் தங்களது மொபைலை உபயோகித்தும் கொண்டே குனிந்து கொண்டே செல்கின்றனர்.

இதனை ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்று ஆராச்சி செய்தது. அப்போது 18-30 வயதில் இருக்கும் மக்களில் 10-ல் 4 பேருக்கு “ஹோர்ன்ஸ்” என அழைக்கப்படக்கூடிய தலையின் பின் பகுதியில் கொம்பு போன்ற அமைப்பு ஒன்று உருவாகிறது. இதற்க்கு காரணம் தலையை குனிந்து கொண்டே மொபைல்களை உபயோகிப்பதே எனவும் அந்த ஆராச்சியில் நிரூபிக்கப்பட்டது.

எனவே மொபைல் போன்களை உபயோகிப்பது தவறு இல்லை. அதை தேவைக்கு மட்டுமே உபயோகித்துக்கொள்ளுங்கள். தலையை குனிந்து கொண்டு மொபைல் உபயோகிப்பதை தவிர்த்தால் இதிலிருந்து விடுபடலாம்.