“என் உடல் நலம் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்” ரசிகர்களுக்கு ஜெயசூர்யா வேண்டுகோள்….

0
126

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஜெயசூர்யா தற்போது உடல்நல மீட்கவும் மோசமான நிலையில் இருப்பதாகவும். அதானால் அவர் கனடாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் சில வதந்திகள் சமூக வலைத்தகளங்களில் எழுந்தன. இதை பெரும்பாலானோர் நம்பிவிட்டனர். இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்த ஜெயசூர்யா, ” நான் நலமாக தான் உள்ளேன். என் உடல் நல்லதிற்கு எந்த வித பாதிப்பும் இல்லை. தான் கனடாவிற்க்கெல்லாம் செல்லவில்லை இலங்கையில் தான் உள்ளேன் . எனவே என் உடல் நலம் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் ” என பதிவிட்டிருந்தார்.