தோல்வியடைந்த சந்திரயான்-2! கண்ணீர்விட்ட விஞ்ஞானிகள்! கட்டியனைத்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி!

0
55

கண்கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் கூறினார்.

நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிப்பணிகளை மேற்கொள்ள இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கடந்த ஜூலை மாதம் சந்திராயன் -2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இதனையடுத்தது சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய  வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.இதனால் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இதனை எதிர் பார்த்து இருந்த விஞ்ஞானிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.குறிப்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் முன்னிலையில் உரையாற்றினார்.தனது உரையை முடித்து வந்த பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் சிவன் கண்கலங்கினார்.இதன் பின் பிரதமர் சிவனை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.