பாலித்தீனை எளிதில் மக்க வைக்கும் பூஞ்சையை கண்டுபிடித்து இந்தியா விஞ்ஞானி சாதனை….

0
168

தற்போதைய காலகட்டத்தில் சுற்றுசூழலை பெரிதும் மாசுபடுத்திவருவது பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கழிவுகள் தான். அதன் தற்போது அதனை பயன்படுத்துவதற்கு பல நாடுகளில் தடை விதித்துள்ளது. அதற்க்கு காரணம் பாலிதீன் மாக்குவதற்கு பல 1000 வருடங்கள் எடுத்துக்கொள்ளுமாம். இதை எவ்வாறு எளிதில் மக்க வைப்பது பல விஞ்ஞானிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இந்தியாவின் புனே பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அவினாஷ் அதே என்பவர் சிறப்பு பூஞ்சை வகை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இது தாவரத்தின் வேர்களில் இருப்பதாகவும், இதனை கேரளா மற்றும் கர்நாடகா உட்பட 5 மாநிலங்களின் 12 பகுதிகளில் இருந்து சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளார் இவர். அதில் MANGF1/WL மற்றும் PNPF15/TS வகைகள் பாலிதீனை எளிதில் சீதைக்கும் என்று சோதனை மூலம் நிரூபித்துள்ளார் இவர்.