கங்குலியுடன் பாலிவுட் பாடலுக்கு ரொமான்டிக் நடனம் ஆடிய ஹர்பஜன் சிங்…!வைரல் வீடியோ

0
33

பிசிசிஐ தலைவர் கங்குலியை பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடனமாட வைத்துள்ளார் ஹர்பஜன் சிங்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்தியக் கிரிக்கெட் அணி ஜாம்பவான்கள் கலந்துகொண்டனர். பிசிசிஐ தலைவர் கங்குலி உடன் ஜாகிர் கான், வீரேந்திர சேவாக், முகமது கைஃப், விவிஎஸ் லக்‌ஷ்மண் மற்றும் ரவிச்சந்தர் அஷ்வின், ஹர்பஜன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இடையே பாடகி உஷா உதுப் பிரபல பாலிவுட் பாடல் ஒன்றைப் பாட இசைக்கு ஏற்றவாறு நடனமாடியபடி கங்குலியை துணைக்கு ஆட அழைத்தார் ஹர்பஜன். ஹர்பஜன் உடன் இணைந்து கங்குலியும் ரொமான்டிக் நடன அசைவுகளுடன் ஆடினார்.

அஷ்வினைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் கங்குலியின் கேப்டன்ஷிப்-ல் ஆடியவர்கள் என்பதால் பழைய நினைவுகளை அனைவரும் பகிர்ந்து மகிழ்ந்தனர்.