தண்டவாளத்தில் நடப்பவர்களை தூக்கிச்சென்ற எமதர்மராஜா …வைரல் புகைப்படம்…

0
148

மும்பையில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது நிகழும் விபத்துகள் தொடர்பாக மும்பை மேற்கு ரயில்வே காவல்துறை சார்பில் எமதர்மராஜன் வேடத்தில் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

ஓடும் ரயிலில் ஏறும் போது நிகழும் விபத்துகள் மற்றும் ரயில் தண்டவாளங்களை கடக்கும்போது ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இதில், எமதர்மராஜன் வேடமணிந்தவர், தண்டவாளத்தை கடக்கும் நபரை தடுப்பதும், தண்டவாளத்தில் நடந்துச் செல்லும் நபரை தூக்கிக் கொண்டு காப்பாற்றுவதும் போன்ற விழிப்புணர்வில் ஈடுபட்டார்.எமதர்மராஜன் வேடத்தில் விழிப்புணர்வு நடத்தியது அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .