நிலவில் மீண்டும் ஒரு சம்பவம் செய்த சந்திராயன்-2!

0
60

கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திராயன்-2 விண்கலம், நிலவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக கடந்த மாதம் 20ம் தேதி சந்திராயன்-2 பூமியின் நீள் வட்டப்பாதையில் இருந்து நிலவின் வட்டப் பாதைக்கு தன் பயணத்தை மாற்றியது.

அதன் பிறகு நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் சந்திரனிலிருந்து ஆர்பிட்டலிலிருந்து லேண்டர் விக்ரம் தனியாக பிரிந்தது. இன்று காலை 8.50 மணிக்கு நிலவின் வட்டப்பாதைக்கு லேண்டர் தனியாக பிரிந்து சென்றது.

இன்றும் நாளையும் லேண்டர் விக்ரம் நிலவின் தரைப்பகுதியை நெருங்கும் வகையில் அதன் பாதை குறைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக லேண்டர் விக்ரம் செப்டம்பர் 7ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி தனது ஆராய்ச்சி பணியை மேற்கொள்ள உள்ளது. தரை இறங்கிய அதே இடத்தில் 14 நாட்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here