சாம்பாரில் பல்லி !!! கர்பிணி பெண் உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதி…

0
90

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படியில் ஊழியர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் இதில் மூன்று ஊழியர்கள் உணவருந்துவதற்க்காக காலையில் தனுஷ்கோடியில் உள்ள ஒரு உணவகத்தில் இட்லி வாங்கி அலுவலகத்தில் சாப்பிட்டுள்ளார்.

அப்போது பாதி உண்ட நிலையில் தான் அவர்களுக்கு தெரிந்தது சாம்பாரில் பல்லி கிடந்தது. இதனைக்கண்ட அவர்கள் மூவரும் அதிர்ச்சியடைந்தனர். அதில் கவிதா என்ற கர்ப்பிணி பெண் ஊழியர் உடனே வாந்தி எடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here