சந்திரயான்-2வை பற்றி மிக முக்கிய செய்தியை வெளியிட்ட மயில்சாமி அண்ணாதுரை!

0
74

சந்திரயான்-1ஐ விட சந்திரயான்-2 நிலவின் தரைப்பரப்பை மிக துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நிலவின் பாதுகாப்பான இடத்தில் தான் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும். இடம் பாதுகாப்பாக இல்லையெனில் ஒரு சில மீட்டர் முன்னோக்கி அல்லது பின்னோக்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்திரயான்-1ஐ விட சந்திரயான்-2 நிலவின் தரைப்பரப்பை மிக துல்லியமாக படம் எடுத்து அனுப்பும். நிலவில் என்னென்ன கனிம வளங்கள் உள்ளன என்பது பற்றி 2 முதல் 14 நாட்கள் ஆய்வு செய்யும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.