Connect with us

தமிழ்நாட்டில் இந்த காரணத்துல மட்டும் தான் விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லையாம்…முதல்வர் விளக்கம்

Featured

தமிழ்நாட்டில் இந்த காரணத்துல மட்டும் தான் விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லையாம்…முதல்வர் விளக்கம்

தமிழக சட்டசபையில் வாதிட்ட பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். புதுச்சேரி, கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டி காட்டினார்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில் கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். சிலை செய்யும் 3 ஆயிரம் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிதி ரூ.5 ஆயிரத்துடன் கூடுதலாக ரூ.5ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்“ என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More in Featured

To Top