Connect with us

திரையுலகமே கொண்டாடிய திரை அரசன் இவருக்காக எல்லாரும் ஒன்றுகூடி நடத்திய ஒரு நிகழ்வு என்னவா இருக்கும்?…

Cinema News

திரையுலகமே கொண்டாடிய திரை அரசன் இவருக்காக எல்லாரும் ஒன்றுகூடி நடத்திய ஒரு நிகழ்வு என்னவா இருக்கும்?…

நடிப்பில் மன்னன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவருக்காக திறக்கப்பட்ட சிலை அதை பற்றி காண்போம் .நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை சென்னை ஆர்.ஏ.புரம் மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. சிவாஜி சிலையை மக்கள் பார்வைக்கு படும்படி வெளியே அமைக்குமாறு கோரிக்கை வைத்த நிலையில், வெளியே அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் மணிமண்டபத்தை பார்வையிட்டு சிவாஜி கணேசனின் குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசினார்.

கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு, நடிகர் ராஜேஷ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிவாஜி கணேசனின் ரசிகர்களும், பல்வேறு அமைப்புகளும் அவருக்கு சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதற்காக சிவாஜி கணேசனின் பேரன் டீவ்ட் ஒன்றையும் போட்டுள்ளார் தமிழனின் பெருமை எனவும் சொல்லியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top