Connect with us

அப்பாவின் பேச்சை மீற முடியாமல் விஜய் செய்த படம்..!கடைசியில் இப்படி ஒரு ரெஸ்பான்ஸா??

Cinema News

அப்பாவின் பேச்சை மீற முடியாமல் விஜய் செய்த படம்..!கடைசியில் இப்படி ஒரு ரெஸ்பான்ஸா??

நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் திரைப்படங்களும் பல தோல்வி திரைப்படங்களும் வெளிவந்துள்ளது…அவை அனைத்துமே ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்றாகும்…இதில் விஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஒரு திரைப்படம் மாபெரும் ஹிட்டாகியுள்ளது அதை பற்றி தகவல் இப்போது வந்துள்ளது.

அதாவது தெலுங்கில் 1996ல் வெளிவந்த படம் தான் பவித்ர பந்தம்…இப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் சௌந்தர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இப்படத்திற்கு முதலில் அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை.இப்படத்தை பார்த்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்.

படத்தை விஜய்க்கு போட்டு காட்டியுள்ளார்…ஆனால் விஜய் இது ஹீரோயின் சப்ஜெக்ட் படமாக இருக்கிறது ஓடாது என கூறியுள்ளார்…பின் தனது அப்பாவின் பேச்சை மீறமுடியாத காரணத்தினால் அப்படத்தில் நடித்துள்ளார் அதை பற்றி அவரே சொல்லி இருந்தார்.

படம் வெளிவந்து முதல் நாள் சரியாக ஓடவில்லை…விநியோகிஸ்தர்கள் பணத்தை திரும்பி வாங்கி சென்று விட கூறி இருக்கிறார்கள் இது அந்த சமயம் மிக பெரிய சர்ச்சை தந்தது.

உடனடியாக சந்திரசேகர் தன்னுடைய PRO-வை அழைத்து பிரிந்து சேர்ந்த தம்பதிகள் 10 பேரை தயார் செய்யும்படி கூறியிருக்கிறார்…அவர்களை விஜயின் முன் அழைத்து வந்து மாலை மாற்றிக்கொள்ள சொல்லி அதை ப்ரோமோஷனாக வைத்து படத்தினை ஓட்டி இருக்கிறார்…படமும் அதன் பின் தான் மிக பெரிய வெற்றியடைந்துள்ளது….அந்த படம் தான் பிரியமானவளே திரைப்படமாகும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "கொடூரமான இறைவன் படத்தின் Promo..Strictly For Adults!"

More in Cinema News

To Top