Connect with us

ஐபிஎஸ் அதிகாரியாக கலக்கும் விஜய் சேதுபதி.. டிஎஸ்பி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!!

Cinema News

ஐபிஎஸ் அதிகாரியாக கலக்கும் விஜய் சேதுபதி.. டிஎஸ்பி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!!

விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் டிஎஸ்பி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

ஹீரோ, வில்லன் என கிடைக்கும் அனைத்து ரோல்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது தென்னிந்தியா சினிமாக்களை கடந்து பாலிவுட் வரை சென்றுவிட்டார்.

இந்நிலையில், மீண்டும் போலீஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வாஸ்கோடகாமா என்ற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். டிஎஸ்பி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஎஸ்பி படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் கெட்டப்பில் இருக்கும் மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு க்ரீத்தி நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரபாகர், குக் வித் கோமாளி புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில், டி இமான் இசையில் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. விஜய் முத்துபாண்டி என்பவர் எழுதிய இந்த பாடலை உதித் நாராயணன், செந்தில் கணேஷ், மாளவிகா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top