Connect with us

LEO: “500 நடன கலைஞர்களுடன் விஜய்யின் Intro Song! இன்னொரு வாத்தி கம்மிங்கா?!”

Cinema News

LEO: “500 நடன கலைஞர்களுடன் விஜய்யின் Intro Song! இன்னொரு வாத்தி கம்மிங்கா?!”

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ’LEO’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். குறிப்பாக சென்னையில் சமீபத்தில் விஜய் மற்றும் அர்ஜுன் மோதும் ஆக்ரோஷமான ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்ட தாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது கடந்த மூன்று நாட்களாக ’LEO’ படத்தில் விஜய்யின் அறிமுக பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் அதில் 500 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக பாடலின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

‘Master’ படத்தில் இடம்பெற்ற ’Vaathi Coming’ பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய தினேஷ் மாஸ்டர் தான் இந்த பாடலுக்கும் நடன இயக்குனராக பணியாற்றி வருவதாகவும் அதனை அடுத்து இந்த பாடல் இன்னொரு ’Vaathi Coming’ பாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக விஜய்யின் அனைத்து படங்களிலும் அறிமுக பாடல் பிரமாண்டமாக இருப்பது மட்டுமின்றி மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆகும் என்ற வகையில் ’LEO’ படத்தின் அறிமுக பாடல் அதே போன்று உலகம் முழுவதும் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ‘LEO’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சினிமாவில் என்னை கொடுமை படுத்தினார் அந்த நடிகர்,வருத்தத்தை பகிர்ந்த நித்யா மேனன்!

More in Cinema News

To Top