Connect with us

“FIDE WC Chess இறுதி போட்டியில் தோற்ற பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத்தொகை இவ்வளவா?! அப்போ கார்ல்செனுக்கு எவ்வளவு?!”

Sports

“FIDE WC Chess இறுதி போட்டியில் தோற்ற பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத்தொகை இவ்வளவா?! அப்போ கார்ல்செனுக்கு எவ்வளவு?!”

தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தாவா அல்லது உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனா? இந்த வருட உலக கோப்பை செஸ் போட்டியில் யார் மகுடம் சூடுவார்கள் என உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தனது அனுபவத்தின் மூலம் வெற்றிவாகை சூடினார் நார்வே வீரர் கார்ல்சன். ஆனால் அவரால் பிரக்ஞானந்தாவை அவ்வுளவு எளிதாக வெற்றிபெற முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கார்ல்சனின் ஒவ்வொரு நகர்விற்கும் கடுமையான சவாலை அளித்து வந்தார் பிரக்ஞானந்தா. இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் 2 சுற்றுகளும் டிரா ஆன நிலையில், 3 சுற்று டை பிரேக்கர் வரை சென்றது. இவர்கள் இருவரின் ஒவ்வொரு காய் நகர்வும் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு அழைத்துச் சென்றது. முடிவில் 2.5 – 1.5 என்ற புள்ளிக்கணக்கில் பட்டத்தை வென்றார் கார்ல்சன்.

தன்னைவிட வயதிலும் அணுபவத்திலும் தரவரிசையிலும் முன்னிலையில் உள்ள பல போட்டியாளர்களை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் பிரக்ஞானந்தா. குறிப்பாக உலக தரவரிசையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள ஹிகாரு நாகமுரா மற்றும் ஃபேபினோ குரானா ஆகியோருக்கு எதிராக மிக எளிதாக இவர் வெற்றிபெற்றதை அவ்வுளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "அடுத்த படத்திற்கு தயாராகும் சீயான் விக்ரம்! படத்தின் இயக்குனர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!"

More in Sports

To Top