Connect with us

மகிழ்ச்சியும் மனநிறைவும்..!! தேசிய விருது நாயகன் சூர்யா பேச்சு..!!

President_Murmu_Actor_Surya

Cinema News

மகிழ்ச்சியும் மனநிறைவும்..!! தேசிய விருது நாயகன் சூர்யா பேச்சு..!!

முதல் முறையாக தேசிய விருது வென்றுள்ள நடிகர் சூர்யா மிகவும் மன நிறைவாக இருப்பதாக கூறியுள்ளார்.

68 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடந்தது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் விருது வழங்கி கௌரவித்தார்.

இதில் சூரரைப் போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததது. இது சூர்யாவுக்கு முதல் தேசிய விருதாகும். விருது பெற்ற பிறகு பேசிய சூர்யா, “இது என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுத்துள்ளது. 68 ஆவது தேசிய விருதுக்கான தேர்வு குழுவுக்கும், மத்திய அரசுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

சூரரைப் போற்று மொத்தம் 5 விருதுகளை வென்றுள்ளது. இயக்குனர் சுதா கொங்கராவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகாது. 13 வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்திற்கு தங்கத்தாமரை விருதை அவர் பெற்று கொடுத்துள்ளார். எனக்கு முக்கியமான படமாக சூரரைப் போற்று அமைந்துள்ளது.

கொரோனா காலத்தில் எல்லாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்ப்பட்டது. அந்த சூழலில் நிறைய பேருக்கு இந்த படம் நம்பிக்கை கொடுத்துள்ளது. கொரோனா காரணமாக திரையரங்கில் வெளியிட்டு கொண்டாட முடியாத தருணங்கள் இருந்தாலும், ஒரு படத்திற்கு 5 விருதுகள் கிடைப்பது என்பது சாதாரணம் கிடையாது. என்னுடைய ரசிகர்களுக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன்” என்று கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top