தனது கணவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி…!வைரல் வீடியோ

0
199

ஒருவரது வாழ்க்கையில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது மறக்க முடியாத நாள்களில் ஒன்றாகும்.அதிலும் நமக்கு பிடித்தமானவர் பிறந்த நாள் என்றால் அதை கொண்டாடுவதிலே ஒரு தனி பிரியம் தான்.அந்த வகையில் ஒரு மனைவி தனது ஆசை கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மனைவி தனது கணவனின் கண்களை, கைகளால் மூடிக்கொண்டு ஒரு அறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, லவ் யூ என்று விளக்கொளி மற்றும் பூக்களால் எழுதப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த கணவர், மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

https://www.facebook.com/watch/?v=2296504230639879

மேலும், அந்த அறை முழுவதும் விளக்கு, பூக்கள், பலூன் என்று அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. மேலும்,ஏராளமான பரிசுகளும் வைக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோவை சுமார் 73 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்துள்ளனர். சுமார் 86 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.

வீடியோவைப் பார்த்த பலரும் இப்படி ஒரு பிறந்த நாள் பரிசை மனைவியைத் தவிர யாராலும் கொடுக்க முடியாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.