பிக்பாஸ் வீட்டில் முதலில் வெளியேறுபவரை ஆள் காட்டிய கமல்… பதறிய போட்டியாளர்கள்..?

0
40

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று முதல் போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற உள்ள நிலையில் அந்த போட்டியாளர் யார் என்ற சஸ்பென்ஸை கமல்ஹாசன் உடைக்கிறார்.இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் எவிக்சன் ஆகும் போட்டியாளர் யார் என்பதை சொல்வதற்குள் கமல் ஒருசில பில்டப்புகள் செய்து கொண்டிருக்கும்போது எவிக்சன் பட்டியலில் உள்ள போட்டியாளர்கள் திணறி போய் உள்ளனர்.

வெளியேறும் போட்டியாளரை அறிவிக்க ஆரம்பிக்கும் காட்சிகளுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவடைகிறது. இருப்பினும் கமல் பில்டப் செய்யும் காட்சியும் ரேகாவின் முகமும் மாறிமாறி காட்டப்படுவதால் இந்த வாரம் ரேகா தான் வெளியேற்றப்படுகிரார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது. அடுத்த புரமோவில் ரேகா வெளியேறும் காட்சிகள் வருமா? அல்லது நிகழ்ச்சியின்போதுதான் உறுதி செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.