டாப்-10 உலக பணக்காரகள் பட்டியல் வெளியீடு!! இந்தியர்கள் எங்கே?

0
159

போர்ப்ஸ் இதழ் ஆண்டு தோறும் உலகப் பணக்காரர்களின்  பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 13-வது இடத்துக்கு முன்னெறி உள்ளார்.

பில்கேட்ஸ் மற்றும் வாரன் பபேட்டை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் தொடர்ந்து  அமேசானின் நிறுவனர் பெசோஸ் உள்ளார்.இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.9.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.இந்நிலையில் 2018-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2.83 லட்சம் கோடியாக இருந்தது.

தற்போது முகேஷ் அம்பானி சுமார் சொத்து மதிப்பு ரூ.3.53 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.இதன் மூலம் 19-வது இடத்தில் இருந்து 13-வது இடத்திற்க்கு முன்னேறி உள்ளார்.106 இந்திய பணக்காரர்களில்முகேஷ் அம்பானி  முதலிடம் பிடித்துள்ளார்.மேலும் முகேஷ் அம்பானியின் சகோதரரும் ஆர்.காம் நிறுவனத்தின் தலைவருமான அனில் அம்பானி 1349-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் உலகின் 10 பணக்காரர்கள் பட்டியல்:

1) ஜெஃப் பெஸோஸ் $ 131 பில்லியன்

2) பில் கேட்ஸ் 96.5 பில்லியன் டாலர்

3) வாரன் பபெட் $ 82.5 பில்லியன்

4) பெர்னார்ட் அர்னால்ட் $ 76 பில்லியன்

5) கார்லோஸ் ஸ்லிம் ஹெல் $ 64 பில்லியன்

6) அமனிடோ ஒர்டேக $ 62.7 பில்லியன்

7) லாரி எலிசன் $ 62.5 பில்லியன்

8) மார்க் ஜுக்கர்பெர்க் $ 62.3 பில்லியன்

9) மைக்கேல் ப்ளூம்பர்க் $ 55.5 பில்லியன்

10) லாரி பேஜ் $ 50.8 பில்லியன்